News

This is a translation in Tamil. You can also read the original English version.

கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு (HGI) 3-ஆவது நிலை அறுதிப்பாட்டுக்கான முடிவுகள் (ஜூலை 2020)

September 25, 2020

கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பின் சார்பாக, புரூக் வொல்ஃபோர்ட் மற்றும் குமார் வீரப்பன்.

மறுதலிப்பு : முதலில், இந்த ஆய்வு இன்னும் முழுமை பெறவில்லை என்பதை நினைவில் கொள்க. நாங்கள் ஏற்கனவே சில கண்டுபிடிப்புகளை அடையாளங்கண்டிருந்தபோதும், கோவிட்-19-இல் மரபியல் பங்களிப்பு குறித்து திடமான புரிதலை ஏற்படுத்த எங்களுக்கு அதிகளவிலான மாதிரிகள் தேவைப்படுகின்றன. எங்களின் ஆராய்ச்சியில் எந்த அளவிற்கு மாதிரிகளை அதிகப்படுத்த இயலுமோ அந்தளவுக்கு நாங்கள் கண்காணிக்கும் வகையினை ஊர்ஜிதப்படுத்தவும் பலதரபட்ட நோயாளிகளின் குழுக்களை அவை பிரதிபலிப்பதையும் திடமாக நிறுவ இயலும். இரண்டாவதாக, உங்களின் மரபியலை வைத்து உங்களுக்கு அதீத கோவிட்-19 பீடிக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்பதை எங்களால் கூற இயலாது. எங்களின் முடிவுகளைப் பயன்படுத்தும் நோயாளிகள் எங்களது கண்டுபிடிப்புகளைக் கொண்டு கோவிட்-19 நோயை அவர்களது மரபுசார் வடிவத்தைக் கொண்டு அடையாளம் காணக்கூடாது, மாறாக அவர்கள் மருத்துவத்துக்கான வழிவகைகளை மருத்துவ நிபுணர் ஒருவருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். இறுதியாக, இங்கே கொடுக்கப்படுள்ள வார்த்தைகளுள் எவையேனும் புரியாவிட்டால், தயவு செய்து hgi-faq@icda.bioஎன்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்- அதன் வழி அதிகபட்ச புரிதலுக்கு மேலும் தகவல்களை இங்கே சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். வரும் வாரங்களில், ஒரு கோட்பாடு அல்லது கலைச்சொற்களை விளக்கும் தகவல்கள் தரப்படும். அதற்குள்ளாக இடைபட்டக் காலத்தில் இந்தத் தரவுகளைக் கொண்டு அடிப்படை மரபியலை மதிப்பீடு செய்யவும்.

கோவிட்-19 பெருந்தொற்று உலக மக்கள் அனைவரின் தினசரி வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இந்த நச்சில் மற்றும் நோய் குறித்து அதிகப்படியாகப் புரிந்துகொள்ள உலகிலுள்ள விஞ்ஞானிகள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். நாங்களும் அது போன்றதொரு குழுவின் பிரதிநிதிகளே ஆவோம் - கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு (HGI) பன்னாட்டு அளவிலான மரபியல் நிபுணர்கள் SARS-CoV-2 தொற்று மற்றும் அதன் தொடர் நோயான கோவிட்-19 நோயின் பிரதிபலிப்புகளுக்கு உதவும் மனித மரபியல் வகைப்பாடுகளைக் கண்டறிவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். ஒன்றிணைந்து செயல்படுகையில், ஒரு மனிதரின் மரபணுவின் எந்தப் பகுதி ஒருவருக்கு கோவிட்-19 பீடிக்கப்படுவதற்கு வழிவகைகளை ஏற்படுத்துகிறது என்பதையும், அப்படி இருப்பின் அவர்கள் எந்தளவு நோயின் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பதனையும் அறிய விழைகிறோம்.

கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு (HGI)-இன் ஆராய்ச்சி வடிவமைப்பு

எங்களின் ஆராய்ச்சியில், ஒவ்வொரு நேர்வுக்கும் இடையிலான மரபியல் வகைப்பாடுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு SARS-CoV-2-வுக்கு எதிரான பரிசோதனையிலும் தொற்று உறுதிபடுத்தப்படுவோரையும், மக்களில் கோவிட்-19 பீடிக்கப்படாத பொது மனிதர்களையும் ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பீடு Genome Wide Association Study, அல்லது GWAS என அழைக்கப்படுகிறது. GWAS குறித்து விளக்கமுறை காணொலி அல்லது விளக்கப்படத்தைக் காணுங்கள்! ஜூலை 2020 வரையில் 3,199 நேர்வுகள் மற்றும் 897,488 கட்டுப்பாடுகள் உள்ளிட்ட 8 வெவ்வேறான ஆராய்ச்சிகளை நாங்கள் ஒன்றிணைத்துள்ளோம்.

பட்டியல் 1 : தற்போதைக்கான 3-ஆவது நிலை அறுதிப்பாட்டுக்கான முடிவுகள் (ஜூலை 2020).

பட்டியல் 1 : தற்போதைக்கான 3-ஆவது நிலை அறுதிப்பாட்டுக்கான முடிவுகள் (ஜூலை 2020). மேற்குறிப்பிடப்பட்டுள்ள முடிவுகள் 3,199 நேர்வுகளின் (கோவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள்) இடையேயான மரபியல் தரவுகளும் மற்றும் 897,488 கட்டுப்பாடுகளும் (சமுதாயத்தில் கோவிட்-19 பீடிக்கப்படாதவர்களின் மாதிரிகள்) ஒப்பிடுகிறது.

கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு (HGI) கோவிட் -19 தொற்றின் கடுமையை நிர்ணயிக்கும் மரபியல் வகைப்பாடுகளை அடையாளம் காண்கிறது.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் 1, கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு (HGI)-இன் ஆகக் கடைசி முடிவுகளின் சுருக்கக் காட்சியினைக் காட்டுகின்றது. இது மான்ஹாட்டன் ப்லாட் என அழைக்கப்படுகிறது, இந்தப் படக்காட்சியின் முழு விளக்கத்தினை அறிய தயவு செய்து அடிக்குறிப்புப் பகுதியினைக் காண்க. சுருக்கமாகக் கூறின், மான்ஹாட்டன் ப்லாட் எனப்படுவது தனிக்கூறுகளுக்கிடையிலான (எ.கா., கோவிட்-19) பிணைப்பைக் காணவும் மற்றும் ஒட்டுமொத்த மரபு ரேகைகளுக்கிடையிலான மரபியல் மாற்றுருக்களை அறியவும் பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் 3-ஆம் உயிர் அணுககோலில் புள்ளிவிபர அடிப்படையில் குறிப்பிடத்தக்க உடல் கூறு ஒன்றினைக் கண்டறிந்துள்ளோம் (x-axis கிடைக்கோட்டில் குறிப்பிட்டுள்ளபடி, 3-ஆம் உயிர் அணுககோலின் மேல் புள்ளிப்புள்ளியாக இடப்பட்டிருக்கும் செங்குத்து கோட்டினைக் காணவும்). சில வேளைகளில், ஓர் உடல்கூறில் பல்வேறு மரபணுக்கள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக உட்பட்டிருக்கும். கோவிட்-19-இன் கடுமையினை நிர்ணயிக்கும் மரபணுவைக் கண்டுபிடிக்க கூடுதலான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே அந்த புள்ளிவிபர அடிப்படையில் குறிப்பிடத்தக்க உடல் கூற்றினை கண்டறிய இயலும். 3-ஆம் உயிர் அணுககோலில் கண்டறியப்பட்ட உடல் கூறு பல்வேறு மரபணுக்களுடன் மேற்குவிந்துள்ளது ( பட்டியல் 2-இல் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து மரபணுக்களின் பெயர்களையும் காண்க). குறுகலான உடல் கூறில், கோவிட்-19-இன் கடுமையினை நிர்ணயிக்கும் குறிப்பிட்ட மரபணுவைக் கண்டுபிடித்தல் தெளிவாகத் தென்படவில்லை. இருப்பினும், சில சுவாரஸ்சியமான அடைவுகளை நாங்கள் கண்டிருக்கின்றோம்! இந்த உடல் கூறில் சில கெமொக்கின் - சம்பந்தப்பட்ட CXCR6 மற்றும் CCR1 மரபணுக்கள் உள்ளன. கெமொக்கின் தடுப்பாற்றல் உயிரணுவின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றது அதோடு நோய் தடுப்பாற்றல் முறைமை சரிவர செயல்படவும் இது இன்றியமையாததாகின்றது. SLC6A20 மரபணுவும் இந்த உடல் கூறில் இருக்கின்றது, இது ACE2 உடன் பிணையாகும் புரதத்தை உருவாக்குகின்றது. இந்த ACE2 புரதம், SARS-CoV-2 நச்சில் நம் உயிரணுக்களுக்குள் புகுவதற்கு ஒரு கதவைப் போல செயல்படுகிறது (பட்டியல் 3). அப்படியாயின், SLC6A20-இல் உள்ள மரபியல் மாறுபாடுகள் நச்சில் உள்ளே வர வசீகர சக்தியைக் கொண்டிருக்க வாய்ப்புகள் இருக்கிறது என பொருள்படுகிறது. மரபியல் சார்புடைய எங்கள் ஆய்வின் அடிப்படையிலான இந்த முடிவுகள் இந்த ஆய்வின் நிகழ்முறையைப் பொருத்தவரை இன்னும் முதல் படியிலேயே இருக்கிறது.

பட்டியல் 2 : UCSC Genome Browser-ரிலிருந்து படக்காட்சி.

பட்டியல் 2 : UCSC Genome Browser-ரிலிருந்து படக்காட்சி. இந்தப் பட்டியலில் காட்டப்பட்டிருக்கும் தடம் எங்கள் ஆர்வத்தினைத் தூண்டும் 3-ஆம் உயிர் அணுககோலின் மரபணுக்களைக் (எ.கா., CXCR6, SLC6A20, CCR1) காட்டுகின்றது.

ட்டியல் 3 : ACE-2  ஏற்பியின் படக்காட்சி.

ட்டியல் 3 : ACE-2 ஏற்பியின் படக்காட்சி. இப்படக்காட்சி எவ்வாறு ACE-2 பெருந்திரள் உயிரணுவின் ஏற்பியாகச் செயல்படுகிறது, அதோடு SARS-CoV-2 நச்சிலின் வாயிலாக வரும் தொற்றுக்கு மூலமாகவும் விளங்குகிறது என்பதைக் காட்டுகின்றது. இந்தப் படக்காட்சி எடுத்தாளப்பட்ட இணையதளம் https://www.rndsystems.com/resources/articles/ace-2-sars-receptor-identified.

நமது ஆய்வு முடிவுகளைப் பிற ஆய்வுகளோடு ஒப்பிடுதல்

நீங்கள் கோவிட்-19 - உடன் தொடர்புடைய இரத்த வகையைப் பற்றி [செய்தி](https://www.cnn.com/2020/07/16/health/blood-types-coronavirus-wellness-scn/index.htmlகளில் கேள்விப்பட்டிருப்பீர்கள். 'ஏ' வகை இரத்தம் அதிக ஆபத்தானது என்றும் 'ஓ' வகை பாதுகாப்பானது என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். சமீபத்திய New England Journal of Medicine (NEJM))-இல் வெளியான கட்டுரை ஒன்று தீவிர கோவிட்-19-க்கு (எ.கா. சுவாசிக்க முடியாமல் மருத்துவமனையில் சேர்க்கப்படுத்தல்), இத்தாலி மற்றும் ஸ்பெயினைச் சார்ந்த 1,980 நபர்களைக் (23andMe-யாலும் பிரதிபலிக்கப்பட்ட) கொண்டு செய்யப்பட்ட ஆய்வு மரபணு சார்பை விவரிக்கின்றது. இந்த ஆய்வில், ஏ, பி, ஓ இரத்த வகைகளின் மரபணு 9-ஆம் உயிர் அணுககோல் குறிப்பிடத்தக்க அளவில் கோவிட்-19-உடன் தொடர்புடையதாகக் கருதப் படுகிறது. இருந்த போதிலும், இந்த ஆய்வில் இரத்த தானம் செய்யும் குழுவினரை ஆய்வுக்குப் பயன்படுத்தியுள்ளனர், அதோடு 'ஓ' வகையைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அக்குழுவில் இருந்தமையாலும் கோவிட்-19-ஆல் பாதிப்புற்றவர்களுக்கான முழுமையான ஒப்பீடாக இது அமையாது. மேலும், நம் தகவல்கள் வழி கிடைத்தவை: பட்டியல் 1- இல் உள்ள மேன்ஹாட்டன் ப்லாட் வழி உயிர் அணுககோல் 9 பற்றி புள்ளிவிவர அடிப்படையில் அமையாத முடிவினை (எ. கா.புள்ளிகள் சிவப்பு கோட்டிற்கு மேல் செல்வது.) நீங்கள் காணலாம். NEJM ஆய்வின் வழி கிடைத்த தகவல்கள் உள்ளிட்ட கோவிட் - 19 HGI ஆய்வு, இந்த நிலையில் ஏ, பி, ஓ இரத்த வகை மரபணுவின் தொடர்பை ஆதரிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. கோவிட் - 19-உடன் மரபணுத் தொடர்பைத் தெளிவு படுத்திக்கொள்ள நமக்கு பெரிய எண்ணிக்கையிலான சோதனை மாதிரி தேவைப்படுகின்றன.

நம் ஆய்வில் இருக்கும் வரம்புகளை ஒப்புக்கொள்ளுதல்

எந்த ஆய்வு வரைவும் பூரணத்துவம் பெற்றது அல்ல என்பதால் நமது ஆய்வில் இருக்கும் வரம்புகளை முன்னிலைப்படுத்த எண்ணுகிறோம். முதலில், மேற்கூறிய ஆய்வு முடிவுகள் ஆரம்பக்கட்ட நிலையில் ஜூலை 2020-இல் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களாகும். ஆரம்பகட்ட கண்காணிப்பு தொடங்குவதற்கான போதிய ஆய்வு மாதிரிகள் நமக்கு இருக்க, எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆய்வு மாதிரிகள் கிடைக்கும்போது செய்யப்படும் சோதனைகள் நம் ஆய்வின் முடிவில் கூடுதல் நம்பகத்தனமையை ஏற்படுத்த உதவும். அதிக எண்ணிக்கை என்று வருத்தத்தோடு குறிப்பிடுவது SARS-CoV-2-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையாகும். இது மரபணு சார்புக்கும் நோய்களுக்கும் உள்ள அமைவு வகைகளைக் கண்டறியும் நம்முடைய திறனையும் வளர்த்துக்கொள்ள உதவும்.

இரண்டாவதாக, நோய்க் கடுமை என்பதன் பொருள் வரையறை ஒவ்வொரு தனி நபர் ஆய்வில் இருந்து மாறுபடும். மேலும், கட்டுப்பாடுகள் கோவிட் -19 தொற்றாமல் இருப்பதற்கானது என கருதும் வேளையில், நோய் அறிகுறியற்ற தனிநபர்கள் நோய் தொற்று கொண்ட குழுவில் இருப்பதையும் நாம் அறிவோம். எனவே, இக்கட்டுப்பாடுகள் கொண்டு குழுவில் இருப்பவர்களும் கோவிட் -19 கொண்டவர்களாக இருக்கலாம். இருந்தபோதிலும், நோயுற்றவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பிலும் மற்றும் கட்டுப்பாடுகள் மதிப்பீடு செய்வதன் வழியும் இந்த வரையறை சிக்கல்களை கடக்க முடியும்: அதிக மாதிரிகளை ஆய்வு செய்வதன் வழி குறைந்த தவறான நோய் அறிகுறிகளை ஆராயும் அபாயத்தைக் குறைக்க முடியும். உறுதியான அறிகுறியை அடையாளம் கண்ட பிறகு, குறிப்பிட்ட நோய் வரையறைக்கு கட்டுப்படுத்தப்பட்ட குழுவினைக் கொண்டு சிறிய அளவிலான ஆய்வுகளில் கவனம் செலுத்தலாம். அனைத்திற்கும் மேலாக நம் மரபணு ஆய்வு முடிவுகளைக் கொண்டு நோய் இயங்குமுறைமையில் உள்நோக்கினைப் பெறுவதற்குக் கூடுதலான ஆய்வுகள் தேவைப்படும்.

நம்முடைய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்

சோதனை மாதிரி அளவு குறைப்பாட்டுச் சிக்கலைச் சமாளிக்கும் வகையில், பங்களிப்பு ஆய்வுவினைத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு வருகிறோம். அடுத்த ஆய்வு செப்டெம்பர் மாத இறுதியில் செய்யப்படுவதோடு அதன் முடிவுகள் அக்டோபர், 2020 தொடக்கத்தில் வெளியிடப்படும். அடுத்த முடிவு வெளியீட்டின் போது தற்போது உள்ள ஆய்வு மாதிரிகளைக் காட்டிலும் 50% அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் என்பதால் இன்னும் கூடுதலான உள்நோக்கினைப் பெறலாம் என்று எதிர்பார்க்கின்றோம். கோவிட-19 நோயாளிகளின் அறிகுறிகள் குறித்து அதிக அளவில் தகவல்கள் திரட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 2020-இல் நாம் கண்டறிந்ததைப் பற்றி படிப்பதற்கு இங்கே செல்லவும்!

எங்கள் தொடக்கட்ட முடிவுகளைக் கொண்டு புலனாய்வு தொடங்குகிறது. மரபணு காரணத்தால் பாதிக்கப்பட்ட உயிரியல் செயலாக்கமும் கோவிட்-19-இன் விளைவோடு அது எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பது பற்றிய கூடுதல் புரிதலையும் பெறுவதற்கு நம் கூட்டமைப்பும் இதர அறிவியலாளர்களும் கூடுதல் ஆய்வுகள் செய்யலாம். ஆய்வுகளின் தொடர் செயல் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற இந்த இணைப்பிற்குச் செல்லவும். இது போன்ற ஆய்வு எவ்வாறு மரபணு மாறுபாடு தீவிர பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மத்தியில் காணப்படும் விளைவுகளோடு தொடர்பு கொண்டுள்ளது என்பது பற்றி ஆராயலாம். நம் மரபணு சார்ந்த முடிவுகள் கோவிட் -19 நோயாளிகள் அல்லது நோய்களுக்கான சிகிச்சைகளுக்குமான மருத்துவ மேலாண்மையை மேம்படுத்தும் நம்பிக்கையை வழங்கும் என்பதை உணர்ந்து நாங்கள் உற்சாகமடைகிறோம்.

கூடுதல் ஆதாரங்கள்

கோவிட் -19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு (HGI) சார்ந்த முயற்சிகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள பிரபல பத்திரிக்கைகளில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளைப் பார்க்கவும்.

Washington Post

Vanity Fair

NY Times

நன்றி நவில்தல்

ரேச்சல் லியாவ், கெய்ட்லின் கூனி, சிஜிசி, கேரன் சுசி, ஆண்ட்ரியா கன்னா, அலீனா சான், சோபி லிமோவ், ஷியா ஆண்ட்ருவ்ஸ் மற்றும் ஜமால் நசீர் ஆகியோருக்கு சிந்தனையார்ந்த பின்னூட்டம் மற்றும் புனராய்வுகளுக்கு நன்றி.

அடிக்குறிப்பு

மேன்ஹாட்டன் ப்லாட் (உச்ச நிலை நியூ யார்க் நகரத்தின் வான விளிம்பைப் போன்று இருக்க வேண்டும் என்று பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது.) GWAS முடிவுகளை பொதுவாகக் காட்சிப் படுத்துதலாகும். நேர்க்கோடு அல்லது x-axis (உயிர் அணுககோல்) 23 உயிர் அணுககோல்களின் மரபணு மாறுபாட்டு நிலையைக் (மனிதர்களுக்கு 22 ஜோடி உயிர் அணுககோல்களுடன் X மற்றும் Y என்னும் பாலின உயிர் அணுககோல்) காட்டுகிறது. செங்குத்தான கோடு அல்லது Y- axis நெகட்டிவ் மடக்கை அளவையாக உருமாற்றம் பெற்ற p-மதிப்பு என்னும் முக்கியமான புள்ளிவிவர அளவைக் காட்டுகிறது. வரைவில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் உயிர் அணுககோல் நிலையினால் (எஸ்.என்.பி - "ஸ்னிப்" என்று அழைக்கப்படும்) மரபணு மாறுபாட்டுடன் ஒவ்வொரு நபரிடத்தும் அளவிடப்படும் நோயின் விளைவத் தொடர்பு படுத்தும் முக்கியமான புள்ளி விவரத்தைக் (p-மதிப்பு) காட்டும். செங்குத்தான கோட்டில் புள்ளி நிலை எவ்வளவு உயருமோ, அந்த அளவிற்கு எஸ்.என்.பி நோய் விளைவோடு (எ. கா. கோவிட்-19 கடுமைத் தன்மை) தொடர்பு படுத்தப் பட்டிருக்கும். நம் ஆராய்ச்சி முறை கவனத்தில் கொள்பவை: பல ஆய்வுகளுக்கு முடிவுகள் முக்கியமானதாக அமைய 0.05-க்கும் குறைவானதான ஒரு p-மதிப்பு தேவைப்படும். நம் ஆய்வு முடிவில் நம்பிக்கையை ஏற்படுத்த நமக்கு 0.00000005-க்கும் (சிவப்புக் கோடு காட்டும்) குறைவான p-மதிப்பு தேவை. சிவப்புக் கோட்டைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் புள்ளி இருந்தால், மரபணு தொடர்பு புள்ளிவிவர அடிப்படையில் முக்கியமானதாக கருதுவோம். ஆகையால், மேலும் இதனை உறுதிப்படுத்தவும் எஸ்.என்.பி. உயிரியல் பொருத்தத்தை புரிந்துகொள்ளும்படியாக பரிசோதனையை வடிவமைக்கலாம்.