News

This is a translation in Tamil. You can also read the original English version.

Tamil-3rd-blog

April 07, 2021

COVID-19 HGI-க்காக இப்படிவத்தை மொழிபெயர்த்தவர் : இளங்குமரன் சிவநாதன், எழுதியவர் : மின்டு மார்த்தில்லா, அன்னிகா ஃபௌகொன், நிர்மல் வட்காமா, சியா எண்ரூவ்ஸ், புரூக் வொல்ஃபோர்ட் மற்றும் குமார் வீரப்பன்.

கோவிட்-19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு (HGI) 5-ஆவது நிலை அறுதிப்பாட்டுக்கான முடிவுகள் (ஜனவரி 2021)

மார்ச் 02, 2021

கோவிட்-19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு (HGI) சார்பில் மின்ட்டு மர்த்தில்லா, அன்னிக்கா ஃபவுகன், நிர்மல் வட்காமா, ஷியா ஆன்ட்ரு, புரோக் வோல்போஃர்ட் மற்றும் குமார் வீரப்பன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

குறிப்பு: கோவிட்-19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு என்பது தகவல், ஆலோசனைகள், நோயாளிகள் சேர்த்தல் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பரப்புதல் போன்றவற்றை இணைந்து மேற்கொள்ளும் 54 நாடுகளைச் சேர்ந்த 2000 விஞ்ஞானிகள் கூட்டமைபைப் பிரதிநிதிக்கும். எங்களின் ஆய்வு வடிவமைப்பைக் காண எங்கள் தொடக்க வலைப்பதிவை (பிளாக்) வாசிக்கவும். எங்கள் ஆய்வு மறுபயன்பாடு தன்மை கொண்டுள்ளதோடு எங்களின் புதிய ஆய்வு முடிவுகளை வலைப்பதிவுகளின் மூலமாகவும் இணைய தளத்தில் உள்ள முடிவுகள் பகுதியின் வழி சுருக்கமாக தொகுத்து தந்துள்ளோம். இங்கு காணப்படும் கலைச்சொற்கள் உங்களுக்கு புதியனவாக இருந்தால், hgi-faq@icda.bio என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். தகவலைகளைப் புதுப்பிப்பதன் மூலம் சரியான தெளிவு கிடைப்பதை அறிந்து நாங்கள் மகிழ்சசி அடைவோம். இனி வரும் வாரங்களில், கருத்துக்கள் மற்றும் கலைச்சொற்களை விளக்கும் கூடுதல் தகவல்கள் கிடைக்க வழி செய்வோம். இந்த இடைக்காலத்தில் மரபியல் சார்ந்த அடிப்படை செய்திகளை அறிந்து கொள்ள இந்த தகவல்களைக் காணவும்.

Scientific article of this release is now on medRXiv.

சமீபத்திய நிலை அறுதிப்பாட்டுக்கான முடிவுகள் (வெளியீடு 5) கூடுதல் மாதிரிகளையும் மரபியல் கண்டுபிடிப்புகளின் வலிமையையும் அதிகரிக்கச் செய்கிறது.

கோவிட்-19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு எங்களின் முந்தைய வெளியீடுகளின் வலிமையான மரபியல் குறியீடுகளை மீண்டும் காட்டுவதோடு. Genome Wide Association Study (GWAS) முடிவுகளையும் பிரதிபலிக்கிறது: இவை இரண்டும், ஆய்வு பங்கேற்பாளர்கள் (>2 மில்லியன் தனிநபர்கள்) மற்றும் கூட்டு பணியாளர்கள் எண்ணிக்கை (>2,000 விஞ்ஞானிகள்) ஆகியவற்றைச் சார்ந்து அமைகின்றன. இங்கு, நிலை அறுதிப்பாட்டுக்கான முடிவுகள் வெளியீடு 5-இன் சமீபத்திய முடிவுகளை நாங்கள் விவரிக்கிறோம். எங்களின் முந்தைய நிலை அறுதிப்பாட்டுக்கான முடிவுகள் வெளியீடு 4-இல், தீவிர கோவிட்-19-உடன் தொடர்புடைய மனித மரபியல் வேறுபாடுகளின் அடையாளைத்தை அறிவித்துள்ளோம் (வெளியீடு 3 மற்றும் வெளியீடு 4 குறித்த தகவல்களுக்கு எங்கள் வலைப்பதிவில் விஞ்ஞானிகள் அல்லாதவர் பகுதியைக் காணவும்.) இந்த வேறுபாடுகளை GWAS-இன் 30,000 கோவிட்-19 நோயாளிகள் (எ. கா. நோயாளி பதிவுகள) மற்றும் 1.47 மில்லியன் கோவிட்-19 நோயற்றவர்கள் (எ. கா. கட்டுப்பாடு) வழி கண்டறிந்துள்ளோம். இடை நிறுத்தம் வெளியீடு 5-இல், நாங்கள் மாதிரி எண்ணிக்கையை 19 நாடுகளின் (படம் 1) 47 ஆய்வுகளில் கிடைத்த தகவல்களை ஏறத்தாழ 50,000 கோவிட்-19 நோயாளிகளாகவும் 2 மில்லியனுக்கு மேற்பட்ட கட்டுப்பாடுகளாவும் அதிகரித்துளளோம். மாதிரிகளை அதிகரிப்பதன் மூலம் எங்கள் கண்டுபிடிப்புகள் மீதான நம்பிக்கையும் உயர்கிறது. இந்த இடைக்கால தகவல் இடைநிறுத்தத்தின் வழி மக்கள் தொகையின் பன்முகத்தன்மையை மேம்படுத்தவும் முயற்சித்துள்ளோம். மக்களிடையே மூதாதையர் மரபியல் பன்முகத்தன்மை குறித்த மரபியல் ஆய்வு கோவிட்-19-இன் தீவிரத் தன்மையைப் பாதிக்கும் மரபியல் வகைகளையும் அவை உலகளவில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் புரிந்து கொள்ள எங்களுக்கு உதவுகிறது. 47 பங்களிப்பு ஆய்வுகளுள், 19 ஐரோப்பிய மக்கள் அல்லாத ஆய்வுகளும் அடங்கும்.

19 நாடுகளிலிருந்து பெறப்பட்ட 47 ஆய்வுகள் - பதியப்பட்ட ஆய்வுகளுள் 35% (N = 143)2.1 மில்லியனுக்கும் மேற்பட்ட மரபணு வகை கொண்ட தனிநபர்களிலிருந்து 49,562 கோவிட்-19 பாசிட்டிவ் நோயாளிகள்.

Biobanks - உயிரியல் வங்கி Clinical Studies - மருத்துவ ஆய்வுகள் DTC Companies - DTC நிறுவனங்கள்


படம் 1: 47 பங்களிப்பு ஆய்வுகளுள், 19 ஐரோப்பிய மக்கள் அல்லாத ஆய்வுகளும் அடங்கும் தகவல் நிலை அறுதிப்பாட்டுக்கான முடிவுகள் வெளியீடு 5-இன் கோவிட்-19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு பங்கேற்ப்பாளர்கள் பட்டியல். ஆண்ட்ரியா கன்னா அவர்களின் ஜனவரி 25, 2021 படைப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

ஆய்வு கட்டமைப்பு

முந்தைய இடைநிறுத்த தகவல்களில் உள்ளது போல, நாங்கள் மூன்று முடிவுகள் குறித்து ஆராய்ச்சியைத் தொடர்ந்துள்ளோம் (படம் 2): A) கோவிட்-19 நோய் தீவிர நிலையில் உள்ளவர்கள் (சுவாச ஆதரவில் உள்ளவர்கள் அல்லது கோவிட்-19 காரணத்தால் இறக்கும் நிலையில் உள்ளவர்கள்), B) கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள். C) SARS-CoV-2 தொற்றுக்கு உள்ளானவர்கள். இந்தப் பகுப்பாய்வு, SARS-CoV-2 மற்றும் கோவிட்-19-க்கான எளிதில் பாதிப்புறும் தன்மை, தீவிரத்தன்மை ஆகியவற்றோடு தொடர்புடைய மரபியல் தன்மைகளைக் கண்டறிவதை நோக்காகக் கொண்டுள்ளது. கடைசி பகுப்பாய்வானது, (பகுப்பாய்வு C) பதிவு செய்யப் பட்ட SARS-CoV-2 தொற்றுக்குப் பங்களிக்கும் மரபியல் வகையைக் கண்டறிவதை நோக்காக கொண்டுள்ளது. இந்த பகுப்பாய்வு தீவிர அறிகுறிகள் தென்படுவது, இல்லாமல் போவது பற்றி பிரிக்காமல் அனைத்து நோயாளிகளையும் உள்ளடக்கியதாகும். இந்த பகுப்பாய்வு முடிவுகள், மாதிரிகள், கட்டுப்பாடு விளக்கங்கள் மற்றும் மாதிரி எண்ணிக்கைகள் படம்-2-இல் காட்டப்படுகின்றன.

5-ஆவது நிலை அறுதிப்பாட்டுக்கான மாதிரி அளவு

Analysis Aபகுப்பாய்வு A - கோவிட்-19 நோய் தீவிர நிலையில் உள்ளவர்கள் Analysis Bபகுப்பாய்வு B - கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் Analysis cபகுப்பாய்வு C - SARS-CoV-2 தொற்றுக்கு உள்ளானவர்கள்
நோயாளிகள் SARS-CoV-2 தொற்று மற்றும் கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழப்பு அல்லது சுவாச ஆதரவில் உள்ளவர்கள் ஆகியவை குறித்து ஆய்வுக்கூடம் உறுதிப்படுத்தியுள்ளவை. SARS-CoV-2 தொற்று மற்றும் கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆகியவை குறித்து ஆய்வுக்கூடம் உறுதிப்படுத்தியுள்ளவை. SARS-CoV-2 தொற்று அல்லது EHR/CD குறியீட்டுமுறை / மருத்துவர் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 அல்லது கோவிட்-19 வினாப்பட்டியல் வழி சுய பதிவு செய்தவர்கள் ஆகியவை குறித்து ஆய்வுக்கூடம் உறுதிப்படுத்தியுள்ளவை.
N=6.179 N=13,641 N=49,562
கட்டுப்பாடுகள் அனைவரும் நோய் கண்டவர்கள் அல்ல எ. கா. மக்கள்தொகை அனைவரும் நோய் கண்டவர்கள் அல்ல எ. கா. மக்கள்தொகை அனைவரும் நோய் கண்டவர்கள் அல்ல எ. கா. மக்கள்தொகை
N=1,4,83,780 N=2,070,709 N=1,770,206

படம் 2: இடை நிறுத்தம் 5-இல் உள்ள நோயாளிகள் குறித்த விளக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகள். கோவிட்-19 தொற்றுக்கு SARS-CoV-2 வைரஸ் தான் காரணம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்ட்ரியா கன்னா அவர்களின் ஜனவரி 25, 2021 படைப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

கோவிட்-19 சார்ந்த உள்ளார்ந்த நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் நுரையீரல் செயலிழப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய மரபுத் தொகுதி பகுதிகள்

நம் பங்களிப்பாளர்கள் வழங்கிய தகவல்களைச் சேகரித்தப் பிறகு, படம்-2-இல் காட்டப்பட்டுள்ளது போல நாங்கள் GWAS-ஐ செயல் படுத்தியுள்ளோம். இதற்கு முன், நிலை அறுதிப்பாட்டுக்கான முடிவுகள் 4-இல் 7 அணுககோல் பகுதிகளில் எளிதில் பாதிப்புறும் தன்மை மற்றும் கோவிட்-19 தீவிரத்தன்மை ஆகியவற்றின் நூதன மரபியல் அடையாளங்களை நாங்கள் முன்னிறுத்தி இருந்தோம். உள்ளார்ந்த நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் நுரையீரல் செயலிழப்பு ஆகியவற்றுக்கான நோய் ஆய்வியலை இந்த பகுதி மையங்கள் முன்னிறுத்தி இருக்கும்: கோவிட்-19 தொற்றுகளுக்கான முதன்மை மருத்துவ புரிதலோடு ஒன்று படும். நிலை அறுதிப்பாட்டுக்கான முடிவுகள் 5-இல் நாங்கள், 15 பரந்த மரபணு குறிப்பிடத்தக்க பகுதிகளை, அனைத்து அணுககோல் வழி அடையாளம் கண்டுள்ளோம். தீவிர நோய் பகுப்பாய்வில் (பகுப்பாய்வு A) மட்டுமே பரந்த மரபணு குறியீடு உள்ளதாக 1 அணுககோல் பகுதி கொண்டுள்ளது. 11 அணுககோல் பகுதிகள் தொற்றுதலுக்கான பகுப்பாய்வில் (பகுப்பாய்வு B) குறிப்பிடப்பட்டுள்ளதைக் காட்டிலும் தீவிரத் தன்மை பகுப்பாய்வுக்கு மிகுதியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றுள் 4 அணுககோல் பகுதிகள் பதிவு செய்யப்பட்ட SARS-CoV-2 தொற்றுதட்டலுக்கு என (பகுப்பாய்வு C) சிறப்பாக உரியவை. இந்த முடிவுகளை படம்-3-இல் நாங்கள் மியாமி வரைவாக (குழுவாக உருவாக்கப்பட்ட மென்ஹாட்டான் வரைவின் பதிப்பு. மியாமி வான்வரை நீரில் பிரதிபலிப்பதால் மியாமி என்று பெயரிடப்பட்டுள்ளது) காட்டியுள்ளோம்.

கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் (N, நோயாளிகள்=13,641, கட்டுப்பாடுகள்=2,070,709)

பதியப்பட்ட SARS-CoV-2 தொற்று (N, நோயாளிகள்=49,562, கட்டுப்பாடுகள்=1,770,206)

படம் 3: கோவிட்-19-க்கான பரந்த மரபணு இணைப்பு முடிவுகள் குறித்த மியாமி வரைவு. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகள் குறித்த ஆய்வின் பரந்த மரபணு இணைப்பிற்கான முடிவுகளை மேற்பகுதி காட்டுகிறது. கீழ்ப்பகுதி, SARS-CoV-2 தொற்று மற்றும் கட்டுப்பாடு (பகுப்பாய்வு C) குறித்த முடிவுகளைக் காட்டுகிறது.

மாறுபட்ட மாதிரிகளின் பங்கு

மாதிரி சேகரிப்புகளின் பன்முகத்தன்மை கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியத்துவம் பெற்றதாக (இங்கு விவரிக்கப் பட்டுள்ளது) பல மரபியல் ஆய்வுகளைக் கொண்டு எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இதன் காரணத்தால், ஆய்வு வளர்ச்சியினூடே மாதிரி சேகரிப்புகளின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவது எங்கள் நோக்கமாகிறது (படம் 4). எங்களின் மேம்படுத்தப்பட்ட மாதிரி சேகரிப்புகள் கோவிட்-19-உடன் தொடர்புடைய புதிய மரபியல் காரணிகளைக் கண்டறியும் வழியில் எங்களை இட்டுச் செல்கிறது (வலைப்பதிவுகளில் எங்களின் முந்தைய வெளியீடு 3 மற்றும் 4-இன் முடிவுகள் விவாதிக்கப்பட்டுள்ளன). மரபியல் அபாய காரணிகளின் உடன் இயங்கும் அடையாளத்தின் வழி எங்களின் பகுப்பாய்வு மரபணுக்களில் அல்லது அவற்றின் அருகில் மரபணு வகைகளை எங்களால் கவனிக்க முடிகிறது. இது வரை, நாங்கள் கண்டறிந்த மரபணுக்கள் அதிக அளவில் செல்லுலர் இயங்குமுறையில் அதிகரித்துள்ள அபாயம், நோய் எதிர்ப்பாற்றல் ஒழுங்குமுறை மற்றும் இதய செயல்பாடு ஆகியவற்றை நோக்கியே அமைகின்றன. இறுதியில், இந்த அபாய காரணிகளை கண்டறிவது, கண்டறியப்பட்ட மரபணுக்களை இலக்காய் கொண்ட சிகிச்சையாகவே அமையும்.

Effective sample size - செயலூக்கம் உடைய மாதிரி அளவு

Analysis type - பகுப்பாய்வு வகை

Reported SARS- COV-2 infection - பதியப்பட்ட SARS-CoV-2 தொற்று

Critically ill COVID-19+ - தீவிர கோவிட்-19+ நோய்

Hospitalized COVID-19+ - கோவிட்-19+ காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்

Effective sample size by ethnicity - இன வாரியான செயலூக்கம் உடைய மாதிரி அளவு

படம் 4: கோவிட்-19 மரபியல் முயற்சிகள் மற்றும் மெட்டா பகுப்பாய்வில் முக்கிய மூதாதையர் குழுக்கள் கலவைக்கும் பங்களிக்கும் ஆய்வுகளின் கண்ணோட்டம். இடை நிறுத்தம் 5-இன் தரவுகளில் 19 ஆய்வுகள் ஐரோப்பியர் அல்லாத மக்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டவையாகும்: 7 ஆப்ரிக்க அமெரிக்கர்கள், 5 கலப்பு அமெரிக்கர்கள், 4 கிழக்கு ஆசியர்கள், 2 தெற்கு ஆசியர்கள் மற்றும் 1 அரேபியர். வைரங்கள் வெவ்வேறு புவியியல் இடங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரி எண்ணிக்கையின் (அறிவியல் நிகழ்வுகளில் புள்ளி விவரப்படி குறிப்பிடத்தக்க விளைவினை காட்டும் மாதிரி எண்ணிக்கை) பயனைக் காட்டுகின்றன.

நாங்கள், கோவிட்-19-உடன் தொடர்புடைய 9 புதிய அணுககோல் பகுதிகளைக் கண்டறிந்துளோம். பகுப்பாய்வு A-இல், தீவிர நோய்-க்கு, இரண்டு மரபணுக்களுக்கு அருகே உள்ள அணுககோல் பகுதிகள்: LZTFL1, அணுககோல் 3-க்கு மேல் மற்றும் TAC4, அணுககோல் 17-க்கு மேல். LZTFL1 புரதம், சிலரி (வேர்: சிலியா) மெம்பெரேன்-க்கான புரத சீர்கேட்டை ஒழுங்கு படுத்துகிறது. சிலியா என்பன, முடி போன்ற கட்டமைப்பைக் கொண்டு உடலின் உயிரணுவில் இருந்து நீட்டிக்கப்படுபவையாகும். இவை, காற்றுப் பாதைகள், நுரையீரல் மற்றும் இன்னும் பல உறுப்புகளில் காணப்படுகின்றன. LZTFL1 நோய் எதிர்ப்பு ஆற்றல் தூண்டலிலும் பங்கெடுக்கிறது. TAC4 புரதம், இரத்த அழுத்தத்தையும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அமைப்பையும் சீராக்க செயல்படுகிறது.

பகுப்பாய்வு B-க்கு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளில், 4 மரபணுக்களின் அருகே உள்ள மாறுபட்ட வகையின் கூட்டமைப்பைக் கண்டறிந்துள்ளோம். முதலில், அணுககோல் 1-இன் மேல் இருக்கும் THBS3-இன் மேல் நாங்கள் ஒரு அணுககோல் பகுதியைக் கண்டு பிடித்துள்ளோம். இந்த மரபணு குறியீடுகள், இதய நோய்கள் இருக்கும் சமயத்தில் இதய செயல்பாட்டைச் சீர்படுத்தும் THBS3 புரதத்துக்கானதாகும். இரண்டாவதாக, அணுககோல் 2-இன் மேல் இருக்கும் SCN1A -இன் மேல் நாங்கள் ஒரு அணுககோல் பகுதியைக் கண்டு பிடித்துள்ளோம். SCN1A மரபணு மாறுபாடுகள் கால் கை வலிப்பிற்கும் அதன் தாக்கத்திற்கும் காரணமாக அமைவதை ஏற்கனவே காட்டப் பட்டுள்ளது. மூன்றாவதாக, அணுககோல் 8-இன் மேல் இருக்கும் TMEM65 -இன் மேல் நாங்கள் ஒரு அணுககோல் பகுதியைக் கண்டு பிடித்துள்ளோம். இந்த மரபணு குறியீடுகள் இதய மேம்பாட்டுக்கும் அதன் சீரான ஓட்டத்திற்கும் செயல்பாட்டிற்கும் பங்கு வகிக்கும் TMEM65 புரதத்துக்கானதாகும். அது உயிரணு ஆற்றல் பரிணாமத்திற்கும் பங்கு வகிக்கலாம். TMEM65-க்கான பகுப்பாய்வில் கண்டறியப்பட்ட வகையானது கிழக்கு ஆசியாவில் 12%-ம், ஐரோப்பிய மக்களில் 1%-ம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். அலிலே அதிர்வலைகள் சில மரபணு அல்லது மரபுத்தொகுதியில் உள்ள மாறுபாடுகளை விவரிக்கின்றன. இறுதியாக, அணுககோல் 17-இன் மேல் இருக்கும் KANSL1 -இன் மேல் நாங்கள் ஒரு அணுககோல் பகுதியைக் கண்டு பிடித்துள்ளோம். இந்த KANSL1 மரபணு குறியிடும் புரதமானது நரம்பியல் செயல்முறைகளுக்கு பங்கு வகிப்பதாக அறியப்படுகிறது.

கடைசியாக, பகுப்பாய்வு C-இல், SARS-CoV-2 தொற்று பதிவுக்கு, அணுககோல் 3-இன் மேல் இருக்கும் ZBTB11, அணுககோல் 5-இன் மேல் இருக்கும் DNAH5 மற்றும் அணுககோல் 19 என 3 புதிய இணைப்புகளைக் கண்டறிந்துள்ளோம். முதலில் அணுககோல் 3-இன் மேல் இருக்கும் மரபணு ZBTB11 அருகே உள்ள பகுதியைக் கண்டு பிடித்தோம். இந்த மரபணு குறியீடு நோய் எதிர்ப்பு உயிரணு வளர்ச்சியைச் சீர்படுத்தும் ZBTB11 புரத்திற்கானது. இரண்டாவதாக, அணுககோல் 5-இன் மேல் இருக்கும் மரபணு DNAH5 மேல் உள்ள மரபணு தொகுதியைக் கண்டு பிடித்தோம். DNAH5-இல் இருக்கும் மரபணு வகை முதற்கட்ட சிலியரி டிஸ்கினேசியா (ciliary dyskinesia), சிலியாவின் குறைபாடு இயக்கம், தொடர்ச்சியான மார்பு தொற்றுநோய்கள், காத்து/மூக்கு/தொண்டை நோய் அறிகுறிகள், மூச்சுக்குழாய் அழற்சி, மலட்டுத்தன்மை ஆகியவற்றிற்குக் காரணமாக அமைகிறது. இறுதியாக, அணுககோல் 19-இன் மேல் இருக்கும் மரபணு PPP1R15A-க்கு மிக அருகே ஒரு மரபணு தொகுதியைக் கண்டு பிடித்தோம். இந்த மரபணு குறியீடு டி.என்.ஏ. சேதம், எதிர்மறை வளர்ச்சி அடையாளங்கள், மற்றும் தவறான புரத கட்டமைப்பின் காரணமாக நோய் எதிர்ப்பு உயிரணு வளர்ச்சித் தடுப்பையும் மற்றும் உயிரணு அழிவையும் கட்டுப்படுத்தும் PPP1R15A புரத்திற்கானது.

கோவிட்-19-இல் நோய் எதிர்ப்பு இயக்கத்தைப் பாதிக்கும் மரபணுக்கள் எங்கள் பகுப்பாய்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நுரையீரல் மற்றும் இதய செயல்பாடு, நரம்பியல் செயல்முறைக்குத் தொடர்புடைய மரபணுக்களும் எங்கள் கண்டுபிடிப்பில் பங்கு வகிக்கின்றன. இதற்கு முன் இதய நோய்கள் கோவிட்-19-க்கு எளிதில் பாதிக்கப் படக்கூடிய தன்மை கொண்டதாகவும் நரம்பியல் அறிகுறிகள் கோவிட்-19 நோயின் ஒரு பகுதியாக பதியப்பட்டுள்ளன

தொடர்பு என்பது காரணம் அல்ல

கூட்டமைப்பு ஆய்வுகளில் கண்டறியப்பட்ட அபாய காரணங்கள் கோவிட்-19-இன் எளிதில் பாதிப்புறும் தன்மைக்கும் அதன் தீவிரத் தன்மைக்கும் அடிப்படை காரணங்களாக அமையாது போகலாம். ஆகையால் நாங்கள் அடிப்படை தொடர்புகளை அனுமானிக்க மரபணு தகவல்களைப் பயன் படுத்தும் மென்டேலியன் சீரற்ற தேர்வுவைப் (Mendelian randomization (MR)) செயல்படுத்தியுள்ளோம். எம்.ஆர். என்பது கொடுக்கப்பட்ட பெளிப்பாட்டிற்கு (எ. கா. பி.எம்.ஐ) தாக்கத்தை ஏற்படுத்தி நோயின் காரணமாக உண்டாகும் வெளிப்பாட்டின் காரணத்தை ஆராய கண்டறியப்பட்ட மரபணு வகையை பயன்படுத்தும் ஒரு முறையாகும். இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ள, எம்.ஆர். எனபதனை விளக்கி எங்களின் சமீபத்திய வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளோம். மூன்று கோவிட்-19 தோற்ற வழியில், புள்ளிவிவர அடிப்படையில் குறிப்பிடும்படியான மூன்று கோவிட்-19 விளைவுகள் மற்றும் 6 தன்மைகள் (38 தேர்வு செய்யப்பட்ட தன்மைகளுள் நாங்கள் பரிசோதித்துள்ளவை, படம் 4) ஆகியவற்றிற்கு இடையே காரண கூட்டமைப்பை அடையாளம் கண்டுள்ளோம். மரபணு வழியில் கணிக்கப்பட்ட உயர் உடல் நிறை குறியீடானது, (பி.எம்.ஐ.), SARS-CoV-2 தொற்று மற்றும் கோவிட்-19 மருத்துவமனை அனுமதிப்பு ஆகியவற்றிற்கு அதிக அளவிலான அபாயத்தோடு தொடர்பு கொண்டதாக நாங்கள் கண்டறிந்துள்ளோம். அதிகரிக்கப்பட்ட பி.எம்.ஐ.-உடன் தொடர்புடைய தீவிர கோவிட்-19 விளைவுகளினால் அபாயம் உயர்வதை கவனிக்கும், கண்காணிப்பு ஆய்வுகளிலிருந்து அறியப்பட்ட கண்டுபிடிப்பை இந்த முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், கோவிட்-19 மருத்துவமனை அனுமதிப்பின் அதிகரிக்கும் ஆபத்து மரபணு வழியில் கணிக்கப்பட்ட புகைபிடித்தலோடு தொடர்புள்ளதாகும்.

படம் 5: 43 தன்மைகள், தீவிர கோவிட்-19 மற்றும் SARS-CoV-2 -இன் பதியப்பட்ட தொற்றுகள் ஆகியவற்றுக்கு இடையிலான காரண கணிப்புக்கான மென்டேலியன் சீரற்ற தேர்வு (Mendelian randomization (MR) மற்றும் மரபணு தொடர்புகள். தன்மைகள் X கோட்டிலும் கோவிட்-19 தோற்ற வழி Y கோட்டிலும் உள்ளன. நீல நிறம் எதிர்மறை மரபணு தொடர்பையும் பாதுகாப்பு அளிக்கும் காரண கணிப்பின் மென்டேலியன் சீரற்ற தேர்வையும் குறிக்க, சிவப்பு நிறம் நேர்மறை மரபணு தொடர்பு மற்றும் அபாய எம்.ர். காரண கணிப்பையும் குறிக்கிறது. பெரிய சதுரங்கள் குறிப்பிடத்தக்க தொடர்புகளைக் குறிக்கின்றன. புள்ளிவிவரத்தில் குறிப்பிடத்தக்க நிலையை அடைந்த காரண கணிப்புகளுக்கு நட்சத்திர குறி இடப்பட்டுள்ளன.

கோவிட்-19-க்கான மரபணுக்களை புரிந்துகொள்ள அனைத்துலக கூட்டு முயற்சி

தற்போதைய அனைத்துலக நெருக்கடியாக இருக்கும் கோவிட்-19 பரவல், 47 வெவ்வேறு பங்களிப்பாளர்களின் அனைத்துலக முயற்சியின் ஆற்றலை இந்த முடிவுகள் காட்டுகின்றன. கோவிட்-19-இன் எளிதில் பாதிப்புறும் தன்மை மற்றும் தீவிரத் தன்மையோடு தொடர்புடைய மொத்தம் 15 மரபணு பகுதிகளைக் கண்டறிந்துள்ளோம். இப்பகுதிகளின் காரணத்தை மேலும் ஆராயும் போது, 8 தன்மைகளோடு புள்ளிவிவர அடிப்படையில் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும் கோவிட்-19 GWAS சமிக்ஞைகளுக்கான காரணத்தையும் கண்டறிய நாங்கள் புள்ளிவிவரத்தின் அடிப்படையிலான அனுமானத்தை (எ.கா.மென்டேலியன் சீரற்ற தேர்வு) பயன் படுத்தியுள்ளோம். தற்போது நாங்கள் எங்கள் முடிவுகளை உறுதி படுத்தி அறிவியல் கட்டுரையாக படைக்கும் பணியில் உள்ளோம். கோவிட்-19-இன் உலக அளவிலான பரவலோடு தொடர்ந்து நாம் போராடி வரும் வேளையில் கோவிட்-19 மரபியல் பெருந்திரள் முன்னெடுப்பு (HGI) தொடர்ச்சியாக மரபணு முடிவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கும். ஒன்றாக இணைந்து பணி புரிவதால், உயிரியல் காரணிகள் மற்றும் கோவிட்-19 மருத்துவ படைப்புகள் குறித்த சரியான புரிதலுக்குத் தேவையான உறுதியான கண்டுபிடிப்புகளை நம்மால் உருவாக்க முடியும்.

நன்றி நவில்தல்

சிந்தனைமிக்க பின்னூட்டம் மற்றும் கருத்துக்களுக்காக ஆண்ட்ரியா கன்னா, பி.எச்.டி. அவர்களுக்கு நன்றி.